Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி வடக்கு மாவட் டத்தில் 23, மத்திய மாவட்டத்தில் 16, தெற்கு மாவட்டத்தில் 15 என மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
லால்குடி அருகேயுள்ள பெரு வளநல்லூர், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையம், உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் திமுக முதன் மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைர மணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவெறும்பூர் ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம், கூத்தைப்பார் ஆகிய இடங்களில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட் டத்தில் 8 இடங்களில் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அடைக்கம்பட்டி கிராமத்தில் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் 30, மத்திய மாவட்டத்தில் 13, தெற்கு மாவட்டத்தில் 11 என மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில், கூகூர், திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் எம்.பி செ.ராமலிங்கம், புளியகுடி, தேவராயன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் எம்.பி சண்முகம், சோழபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட இடங்களில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், திருப்பனந்தாள் பகுதியில் எம்எல்ஏ கோவி.செழியன், பாபநாசம், மெலட்டூரில் மாவட்டச் செயலாளர் சு.கல்யாண சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் ஊராட்சியில் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருவையாறு பகுதியில் எம்எல்ஏ துரை.சந்திரசேகன், பிள்ளையார்பட்டியில் எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், ஒரத்தநாடு புதூரில் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் பங் கேற்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 50-க் கும் மேற்பட்ட இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கமுகக்குடியில் மாவட்டச் செய லாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, அக்கரைக்கோட்டகத்தில் எம்.பி ஏகேஎஸ் விஜயன், மேல வாசலில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா, குன்னலூரில் எம்எல்ஏ ஆடலரசன், எம்.பி எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வாகவாசலில் பெரியண்ணன் அரசு எம்எல்ஏ, பொன்னமராவதி அருகே மறவாமதுரையில் எஸ்.ரகுபதி எம்எல்ஏ, ஆலங்குடி அருகே பூவரசகுடியில் சிவ.வீ.மெய்யநாதன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் ஆர்.வெங்கடாபுரம், ஆத்தூர் ஆகிய இடங்களில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ கலந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT