Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM
நீலகிரி மாவட்ட உணவுப் பாது காப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக மக்கள் சரியான உணவை சாப்பிடுங்கள் என்றவிழிப்புணர்வு லோகோவை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அறிமுகப்படுத் தினார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் சரியானஉணவை உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கும் இயக்கம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சரியான உணவை உண்ணும் பழக்கத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக 150மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், நீலகிரி மாவட்டமும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் உருவாக்கப்பட்ட லோகோவை மாவட்டஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். உணவில்குறைபாடுகள் தொடர்பாக புகார்இருப்பின் 94440 42322 என்றஎண்ணில் ‘வாட்ஸ்-அப்’ புகாராகவோ அல்லது நேரடியாக அலைபேசியிலோ தெரிவிக்கலாம். புகார்மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெ.தங்கவிக் னேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT