Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்திய மருத்துவ சங்கத்தினர் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர்

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ் சாவூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சங்கத்தின் தஞ்சாவூர் கிளைத் தலைவர் மாரிமுத்து கூறியது:

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அபாயகரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள், வலி நிவாரணிகள் இல்லை. சரியான பயிற்சி, அறுவை சிகிச்சைக்குத் தேவை யான அடிப்படை அனுபவம் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்க ளால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், அது உயிரிழப்பு களையும், தேவையில்லாத மருத்து வச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

மேலும், உலக அளவில் நம் நாட்டின் மருத்துவத் துறையின் மீதும், மருத்துவர்களின் மீதும் உள்ள நன்மதிப்பு குறையும்.

எனவே, இந்த அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கத்தினர் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 150 தனியார் மருத்துவ மனைகள், 1,500 கிளினிக்குகளில் இன்று (நேற்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவசர சேவையைத் தவிர, இதர சேவைகள் நிறுத்தப்பட்டன. 1,500-க்கும் அதிகமான மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்றார்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 4 வட்டார மருத்துவ மனைகள், 21 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 150-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் உரிய சிகிச்சை பெற முடியாமல் புற நோயாளிகள் அவதியடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றும் 200-க் கும் மேற்பட்ட மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் முழுவ தும் 90 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்து வர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 85 தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு நேற்று செயல்பட வில்லை. கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x