Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி 5 மாவட்டஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வரும் 28-ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில், தி.மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பிறகு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கூறும்போது, “எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசு கள் தாமாக முன்வந்து கைவிட வேண்டும். இந்த திட்டத்துக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பேசுவது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது. விவசா யிகளை புறம் தள்ளிவிட்டு, கார்ப் பரேட் நிறுவனங்களை ஆதரிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஒரு விவசாயி கூட நிலம் தர விருப்பமில்லை என்பதை அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கும் வகையில், தி.மலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் 28-ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள பல்வேறு அமைப்பினர் பங்கேற்பார்கள்.
சட்டப்பேரவை முற்றுகை
அதன் பிறகும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காவிட்டால், பொங்கல் திருநாளன்று 5 மாவட்ட விவசாயகளின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி துக்க பொங்கலாக அனுசரிக்கப்படும்.மேலும், பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூடும்போது, எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். எட்டு வழிச் சாலைத்திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT