Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக போராட்டம்

மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடலூரில் திமுக மாவட்டச் செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கடலூர்/விழுப்புரம்

மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கடலூரில் திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் இளபுகழேந்தி, ஐயப்பன், கடலூர் நகர ராஜா, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட் டமைப்பு தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், திமுகவினர் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.

இதில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “மோடியின் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டத்தை நீக்க கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மோடி அரசு. அவர்களை கண்டு கொள்ள வில்லை. விவசாயிகளுக்கு திமுகவின் ஆதரவு எப்போதும் இருக்கும்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் கொட்டும் மழையில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், மைதிலி ராஜேந்திரன், தலைமை தீர்மான குழு செயலாளர் ஏஜி சம்பத், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன், மாநில விவசாய அணி துணைசெயலாளர் அன்னியூர் சிவாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான எம்எல்ஏ மஸ்தான் தலைமையேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சீதாபதி, முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், செஞ்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செஞ்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல் ஏ மஸ்தான் உள்ளிட்ட 85 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் பாலக்கரையில் மழையில் நனைந்தபடியே திமுகமாவட்டச் செயலாளர் வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று கள்ளக் குறிச்சியில் திமுக மாவட்ட பொறுப் பாளர் வசந்தம் கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமையில் அஞ்சல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கள்ளக்குறிச்சியில் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x