Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்களில், முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதியதாக மின்னணு வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த இயந்திரங் களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சி யர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். மேலும், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2567 பேலட் யூனிட், 422 கன்ட்ரோல் யூனிட், 459 வி.வி.பேட் உட்பட 3448 இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற் கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x