Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

களையூர் கிராம விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பயிற்சி

கடலூர் அருகே களையூர் கிராம விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூர்

கடலூர் வட்டாரம்,களையூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (அரிசி) 2020-21ன் கீழ் பயிர் சாகுபடி அடிப்படையிலான விவசாயிகள் பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

முதற்கட்ட பயிற்சியில் 30 நெல் சாகுபடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியானது இதே விவசாயிகளுக்கு நான்கு கட்டமாக அதாவது முதற்பயிர் நெல் சாகுபடிக்கு முன்னும்,பயிர் வளர்ச்சிபருவத்திலும், பின்னர் இரண்டாம் போக சாகுபடியான உளுந்து பயிர் விதைப்புக்கு முன்னும், பயிர் வளர்ச்சிப் பருவத்திலும் வேளாண் அலுவலர்களால் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் நடப்பு சம்பா சாகுபடிக்கு நாற்றுவிடத் தொடங்கும் முன் திருந்திய நெல் சாகுபடியில் முக்கிய தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

கடலூர் வேளாண் இணை இயக்குநர் முருகன் தலைமையேற்று பயிற்சியை தொடக்கி வைத்து உயிர் உரங்கள்,உயிரி பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு மற்றும் ரசாயன உரங்களை சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் திருந்திய நெல் சாகுபடியின் முக்கிய 9 தொழில் நுட்பங்ககளை விளக்கி கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க தொழில்நுட்ப உதவியாளர் ராஜீவ்காந்தி கோனோ வீடர் கருவியை பயன்படுத்தி களை எடுத்தல் மற்றும் இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரம் இடுதல் குறித்த செயல் விளக்கங்களை வயலில் செய்து காண்பித்தார். உதவி வேளாண் அலுவலர் ரஜினிகாந்த் முதற்கட்ட பயிற்சிக்கான கருத்துக் காட்சி அமைத்து ஒருங்கிணைப்பு செய்தார்.

திருத்தி அமைக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ள பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர வேண்டிய அவசியம் குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x