Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

மாணவர்கள் பயனடையும் வகையில் அண்ணாமலை பல்கலை. - சி.டி.இ இடையே கல்வி - தொழில் பரிமாற்ற ஒப்பந்தம்

கடலூர்

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகம், சென்னையின் தொழில்நுட்பக் கல்விக்கான கூட்டமைப்பு (சி.டி.இ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்வி நிறுவனத்திற்கும், தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னையின் தொழில்நுட்பக் கல்விக்கான கூட்டமைப்புடன் (சி,டி.இ) நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சி.டி.இ கற்றல் மேலாண்மை அமைப்பு (எல்.எம்.எஸ்) மென்பொருள், புத்தகங்கள், விரிவுரை பொருட்கள் மற்றும் எல்.எம்.எஸ்ஸிற்கான மல்டிமீடியா, வீடியோ உள்ளடக்கங்களை வழங்கும்.

சி.டி.இ ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்கள், ‘இன்டர்ன்ஷிப்’ மற்றும் ஆலை பயிற்சி ஆகியவற்றை எளிதாக்கும். மேலும், சி.டி.இ-யின் இதழில் தொழில் நுட்ப ஆவணங்களை வெளியிடுவதற்கான திட்டத்தையும் வழங்கும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சங்கள், கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை மேம்படுத்துதல், மென்பொருள் மதிப்பீட்டு செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்துதல், மதிப்பீடு நடத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய போக்குகள் குறித்த திட்டங்களை வழங்கும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் முன்னிலையில் பதிவாளர் டாக்டர் ஞானதேவன், சி.டி.இ.யின் தலைமை நிர்வாக அலுவலர் சாய்ராமன் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் முருகப்பன், பேராசிரியர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் டாக்டர் செல்வகுமார், இன்கார் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரகதீஸ்வரன், ஏ.ஐ.சி. இயக்குநர் டாக்டர் கருணாகரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை பேராசிரியர் டாக்டர் சுபன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x