Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM
திருப்பத்தூர் அருகே கி.பி.16-ம்நூற்றாண்டைச் சேர்ந்த ‘நாக தேவதை’ நடுகல் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த எலவம் பட்டி கிராமத்தில் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேரா சிரியர் மோகன்காந்தி, முனைவர் பட்ட ஆய்வு மாணவி மணிமேகலை மற்றும் ஆய்வு குழுவினர் திருப் பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று ஆவணங் களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில், திருப்பத் தூர் - சேலம் சாலையில் சுமார் 8 கி.மீ., தொலைவில் உள்ள எலவம் பட்டி கிராமத்தில் கள ஆய்வு நடத் தியபோது கி.பி.16-ம் நூற்றாண் டைச் சேர்ந்த ‘நாகதேவதை’ நடுகல்லை கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் மோகன்காந்தி கூறும்போது, "திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் கள ஆய்வு நடத் தினோம். அங்கு, சுமார் 500 ஆண்டு களுக்கு முந்தைய விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த நாக தேவதை (நாகினி) நடுகல் ஒன்றை கண்டறிந்தோம்.
இக்கல்லானது 3 அடி உயரமும், 2 அடி அகலத்திலும் உள்ளது. காலில் இருந்து இடுப்பு பகுதி வரை நாகமாகவும், இடுப்பில் இருந்து தலைப்பகுதி வரை பெண் ணாகவும் நாகதேவதை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லின் தலையில் கிரீடம் போன்ற அமைப்பு ஒன்றும் உள்ளது. கைகளை வணங்கியக் கோலத்தில் நாகதேவதை உள்ளது. நாகதேவதையின் 2 பக்கங்களிலும் படம் எடுத்த கோலத்தில் 2 நாக உருவங்கள் உள்ளன.
இக்கல்லுக்கு அருகிலேயே நாக உருவம் பொறிக்கப்பட்ட கல் ஒன்றும் உள்ளது. அதன் அருகே தலைப்பகுதி மட்டும் வெளிப்படும் உருவம் காணப்படுகிறது. தமிழர்பண்பாட்டில் நாக வழிபாடு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரு கிறது. சங்ககால இலக்கியமான மலைபடுகடாம் என்ற நூல் ‘நன்னன் சேய் நன்னன்’ என்ற மன் னனை காண அவனது மலையான நவிரமலையைக் (தற்போது ஜவ்வாதுமலை) கூத்தர்கள் கடக்க முயன்றபோது, இடையில் பல பாம்புகள் தென்படும் அவற்றை கைத்தொழுது வணங்கிச்செல் லுங்கள் என்று மலைபடுகடாமைப் பாடிய பெருங்குன்றூர்க் பெருங் கெளசிகனார் கூறுகிறார்.
திருப்பத்தூரில் உள்ள ஜவ்வாது மலையில் இன்றும் மக்கள் திரு விழா நாட்களில் பாம்பு புற்று மண்ணை எடுத்து வந்து, அதற்கு பச்சைப் பந்தலிட்டு வழிபாடு செய் கின்றனர். எலவம்பட்டி கிராமம் ஜவ்வாதுமலைக்கு அருகாமை யிலேயே உள்ளது.
பொதுவாக நாக வழிபாடு என்பது அச்சத்தின் காரணமாக தோன்றியதாகும். பாம்பு கொடிய விஷம் கலந்த உயிரினம் என்பதால் வீடுகள், நிலங்களுக்குள்ளாக வந்தாலும், தொழில் நிமித்தமாக பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்லும்போது தங்களை தன் கொடிய நஞ்சால் கொல்லக்கூடாது என்பதற்காக அவற்றை வழிபட்டிருக்கின்றனர்.
மக்களின் இந்த அச்சத்தின் வழியே ஏற்பட்டது வழிபாட்டு முறை யாகும். மக்கள் தாங்கள் வழிபடும் கடவுளின் அணிகலன்களிலும் பாம்புகள் இருக்கும் என நம்பினார் கள். சிவன், காளி, கால பைரவர் போன்ற கடவுள்களுக்கு அணி கலனாகவும், திருமாலுக்குப் படுக்கையாக ஆதிகேசவன் இருப்பதாக வும் முழுமையாக நம்பினார்கள். மரங்களின் அடியில் கற்களில் பாம்புருவம் பொறித்து அதையும் வணங்குவது தமிழர்களின் நம்பிக்கையும், வழக்கமும் ஆகும். எலவம்பட்டி கிராமத்தில் கண் டெடுக்கப்பட்ட நாகதேவதை நடுகல் மேல்பாதி உடல் பெண்ணாகவும், கீழே பாதி உடல் பாம்பாகவும் வடித்துள்ள இந்த சிலை கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்கள் வழிபட்டிருக்கலாம்.
எனவே, சிதைந்த நிலையில் உள்ள இந்த கல்லை தொல்லியல் துறையினர் பாதுகாக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT