Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்துடன் இணைந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (AEPC) வரும் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை கடைப் பிடிக்கிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை,திருப்பூரில் உள்ள அலுவலகத்தில்ஏ.இ.பி.சி. தலைவர் ஏ.சக்திவேல் தொடங்கி வைத்தார்.
நாட்டின் அனைத்து பிராந்தியஅலுவலகங்களிலுள்ள ஊழியர்களுடன், அனைத்து உறுப்பினர்களும் வரும் 15-ம் தேதி வரைதூய்மை இந்தியா இயக்கத்தை அந்தந்த பிரிவுகளில் தொடங்க வேண்டும். கரோனா தொற்று தொடர்பான சுகாதார மேலாண்மை குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை தீவிரமாக சுத்தம் செய்தல்,சுத்திகரிப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, அனைவரும் தூய்மை இந்தியாதிட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நேதாஜி அப்பேரல் பார்க், முதலிபாளையம் சிட்கோஉள்ளிட்ட தொழில் வளாகங்களிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நிறுவனங்களில் மூலப்பொருள் கழிவு, மின்னணு கழிவுகளை அகற்றுவது, வளாகத் தூய்மை, பாதுகாப்பு குறித்து தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT