Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால (3 முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகின்றன. இதற்காக இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏசி, குளிர்சாதனப்பெட்டி தொழில்நுட்ப வல்லுநர், எலெக்ட்ரீஷியன் ஆகிய பயிற்சிகள், சனவேலி சவேரியார்பட்டினத்தில் உள்ள பீப்பிள் ஓரியண்ட் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில்(மொபைல் எண்- 9750475024) வழங்கப்படும். அழகுக்கலை நிபுணர் பயிற்சி, ராமநாதபுரம் சாலைத்தெரு கே.டி.எம்.காம்ப்ளக்ஸில் உள்ள நாகசிவா என்ற நிறுவனத்தில் (மொபைல் எண்- 7708665478) அளிக்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் மேற்குறிப்பிட்ட பயிற்சி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT