Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM
நாரலப்பள்ளியில் விவசாயிகளுக்கு வாழை சாகுபடி பயிற்சி அளிக்கப் பட்டது.
கிருஷ்ணகிரி, மகராஜகடை, நாரலப்பள்ளி, வேப்பனப்பள்ளி பகுதியில் 100 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் முறையான சாகுபடி தொழில் நுட்பங்களை பின்பற்றாததால் 15 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் எலுமிச்சங்கிரியில் உள்ள ஐசிஏஆர் வேளாண் அறிவியல் மையம் கிருஷ்ணகிரி வட்டம் நாரலப்பள்ளி கிராமத்தில் வாழை சாகுபடி செய்யும் 30 விவசாயிகளை தேர்வு செய்து, உழவர் வயல் வெளி பள்ளிகளில் 14 வகுப்புகளாக நடத்த திட்டமிட்டது.
நாரலப்பள்ளியில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு, வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மைய மண்ணியல் தொழில் நுட்ப வல்லுனர் குணசேகர், மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவத்தையும், வாழை சாகுபடியில் உர மேலாண்மை குறித்து எடுத்து கூறினார்.
தோட்டக்கலை தொழில் நுட்ப வல்லுனர் ரமேஷ்பாபு வாழை சாகுபடி தொழில் நுட்பங்களான வாழைக்கன்று தேர்வு, நடவு முறை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து எடுத்துக் கூறினார். வேளாண்மை விரிவாக்க தொழில் நுட்ப வல்லுநர் செந்தில்குமார் உழவர் வயல்வெளி பள்ளியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். வேளாண்மை அறிவியல் மைய திட்ட உதவியாளர் முகமது இஸ்மாயில், நாரலப்பள்ளி கிராம வாழை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT