Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
கேரள பிளாஸ்டிக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டிய 4 பேருக்கு தலா ரூ.75ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மலுமிச்சம்பட்டி ஊராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் எல் அண்டு டி பைபாஸ்சாலையை ஒட்டி குப்பைக்கொட் டும் இடம் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு கேரள பதிவெண் கொண்ட லாரியில் வந்தவர்கள் குப்பையை கொட்டியுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் சேர்ந்து லாரியை சிறைபிடித்தனர். அதில், பிளாஸ்டிக் செருப்புகள், பாட்டில்கள், கவர்கள் என மூட்டையாக மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், பெருந்தல்மன்னா பகுதியில் இருந்து சுமார் 7 டன் அளவு கழிவுகளை எடுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து, குப்பை கொட்ட முயன்ற நாசர், பி.ரபீக், அப்துல் முஜீப், அஸ்கர் அலி ஆகிய 4 பேருக்கு மலுமிச்சம்பட்டி ஊராட்சி சார்பில் தலா ரூ.75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கொட்டிய குப்பை மீண்டும் லாரியில் ஏற்றி திருப்பி அனுப்பப்பட்டது.
ரூ.4 ஆயிரம் கமிஷனுக்கு ஆசைப்பட்டு இவர்களை அழைத்து வந்து உதவிய உள்ளூரைச் சேர்ந்த இருவர் குறித்தும் விசாரணை செய்யப்பட்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT