Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி அருகே வடவாற்றிலிருந்து புத்தூர் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க் கால் பாசனம் மூலம் பூண்டி, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, புத்தூர், புளியகுடி, குச்சிபாளையம், கோவில்வெண்ணி, ஆதனூர் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்க ரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இளம் பருவத்திலும், பூக்கும் தருணத்திலும் நெற் பயிர்கள் இருப்பதால், அதற்கு தண்ணீர் அதிகம் தேவை. ஆனால், வடவாற்றில் முறைப்பாசனம் மூலம் தண்ணீர் விடப்படுவதால், புத்தூர் வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வயல்களுக்கு ஏறி பாயவில்லை, இதன் காரண மாக, நடவு பயிர்கள் காய்ந்து வருகின்றன.
எனவே, புத்தூர் வாய்க்காலில் முறைப்பாசனம் இன்றி, தொடர்ந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றி யச் செயலாளர் ஆர்.செந்தில் குமார் தலைமையில் அக்கட்சி யினர் நேற்று புளியகுடி தோப்பு பகுதியில் புத்தூர் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
இதில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.உத்தி ராபதி, டி.ராமலிங்கம், எம்.ராஜ மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT