Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறை உருவாக்க வேண்டும். 500 ரேஷன் கார்டுகளுக்கு அதிகமாக உள்ள ரேஷன் கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x