Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM
தூத்துக்குடியில் புரோட்டா கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த வேல்ராஜ் மகன் வாழ்வாங்கி (28). இவர், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பிரதான சாலையில் புரோட்டா கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வியாபாரம் முடிந்ததும் இவர் கடையை பூட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆரோக்கியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பா.எபநேசர் பிரசாத் (30), கெபி தெருவைச் சேர்ந்த வி.அந்தோணி வினோத் (26), தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்த ப.காளிராஜ் (38) ஆகிய மூவரும் கடைக்கு வந்து தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் வெட்டப்பட்ட வாழ்வாங்கி பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய எபநேசர் பிரசாத் உட்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT