Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

கோடியூர் வாரச்சந்தையை திறக்க வேண்டும் திருப்பத்தூர் ஆட்சியரிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் உள்ள கோடியூர் வாரச்சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. ஜோலார்பேட்டை நகரைச் சுற்றியுள்ள பொதுமக்கள் இந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோடியூர் வாரச்சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கோடியூர் வாரச்சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

கோடியூர் வாரச்சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட வியா பாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தோம். இந்நிலையில், கரோனா ஊரடங் கால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட கோடியூர் வாரச்சந்தை இதுவரை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காய்கறி சந்தை, மார்க்கெட், வாரச்சந்தை, பஜார் பகுதிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறை களுடன் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற வட்டங்களிலும் வாரச்சந்தை, உழவர்சந்தைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜோலார் பேட்டை கோடியூர் வாரச் சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர்.

எனவே, இதை தவிர்க்கவும், வியாபாரிகளின் நலனை காக்க கோடியூர் வாரச்சந்தையை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

மனுவை பெற்ற ஆட்சியர் சிவன் அருள், ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி, கோடியூர் வாரச்சந்தையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x