Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 70 பேருக்கு ரூ.1 லட்சம் கடன் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பியவர் தொழில் செய்ய ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் நீண்ட கால கடனை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்322 ஊராட்சிகளில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இந்தத் திட் டத்தின் மூலம், கரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய 267 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராமவறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் நீண்ட கால கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்வு செய்யப்பட்ட தலாரூ.1 லட்சம் வீதம் 70 பேருக்கு ரூ.70லட்சம் மதிப்பிலான காசோலை களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத் தில் 6 ஒன்றியங்களுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த நீண்ட கால கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு விபத்துக் களில் உயிரிழந்த 6 பேரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பிலான காசோலைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப் பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு இருசக்கர நாற்காலியை 3 மாற்றுத்திறனாளிகளுக்கு என மொத்தம் ரூ.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத் துறையில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் சமையலர் பணிக் கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் வானூர் சக்கரபாணி,விக்கிரவாண்டி முத்தமிழ்ச்செல் வன், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x