Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
மரம் வளர்ப்பை அரசும், தன்னார்வ நிறுவனங்களும் ஊக்கு வித்து வருகின்றன. இது கிராமப் புறங்களில் நல்ல பலனை ஏற் படுத்தி தந்துள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர், திட்டக்குடி, ராமநத்தம், தொழுதூர், எழுத்தூர் போன்றகிராமங்களில் இளைஞர்கள் மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி, கிராம வளர்ச்சியில் பங் கெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தபட்டதாரி இளைஞர்கள் ‘ஆலம் விழுது’ என்ற அமைப்பை ஏற்ப டுத்தி, தங்கள் கிராமத்தில் உள்ளஅரசுப் பள்ளி வளாகம், மருத்துவமனை வளாகம், நூலக வளாகம்,இடுகாடு போன்ற பகுதிகளில் சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். சில இடங்களில் ஏற்கெனவே உள்ளமரங்களை பாதுகாக்கின்ற பணி களையும் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக ‘ஆலம் விழுதுகள்’ அமைப்பைச் சேர்ந்தபாண்டியன் கூறும்போது, “மண் ணிற்கும் மக்களுக்கும் பயன்படும் மரங்களையும், கால்நடைகளுக்கு உகந்த மரக் கன்றுகளையும் நட்டு பராமரித்து வருகிறோம். சொந்த செலவில் இந்தப் பணிகளை செய்யும் எங்களுக்கு, வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கி உதவ வேண்டும். இதன் மூலம் எங்கள் பகுதியை பசுமையாக்கி காட்டுவோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT