Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தால் மீட்பு பணியில் ஈடுபடவதற்கு 200 மீனவர்கள், படகுகள் தயார்

சென்னை

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தால், மீட்புப் பணிகளில் ஈடுபட 200 மீனவர்களுடன் 100 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சென்னையில் கனமழை பெய்துநகரின் பல இடங்களில் தண்ணீர்தேங்கியது.

மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வடிய வைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தால் சென்னையில் மீட்பு பணிகளில் ஈடுபட 200 மீனவர்களுடன் 100 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது தாழ்வான பகுதிகளில் சிக்கியிருந்தவர்களை மீனவர்கள் படகுகளின் மூலம் மீட்டனர்.

எனவே, அனுபவம் வாய்ந்த 200 மீனவர்கள் மற்றும் 100 படகுகளை நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பணியாற்ற தயார் நிலையில் வைத்திருக்கிறோம். இந்த படகுகள் மற்றும் மீனவர்களை தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தால் மீட்பு பணியில் ஈடுபடுத்த உள்ளோம்.

மீனவர்கள் மற்றும் படகுகளின் விவரங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விட்டோம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறும் போது தாழ்வான பகுதிகளுக்கு படகுகள் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x