Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகத் தொடங்கியுள்ளன.
புதுச்சேரியில் வரும் 2021-ல்சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தங்கள் பணிகளை துவக்கியுள்ளன.
குறிப்பாக எதிர்க்கட்சி யான என்ஆர் காங்கிரஸ் தொடர் தோல்வியால் சென்டிமென்டாக புது இடத்துக்கு மாறுகிறது.
அதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் கட்சி தலைமை அலுவலகத்துக்கு பூமி பூஜை நடத்தியுள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜகவும் பலரை கட்சியில் இணைத்து தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்துகிறது.
அதேபோல் அதிமுகவில் மாநிலச் செயலாளர் உட்பட முக்கிய பொறுப்புகள் காலியாக உள்ளதால் அவை விரைவில் நிரப்ப வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் காங்கிரஸ் கூட்டணி யிலுள்ள திமுக தற்போது ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இச்சூழலில் சென்னை அண்ணா அறிவால யத்துக்கு புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் மாவட்ட செயலாளர் எ.எம்.எச் நாஜிம் ஆகியோர் சென்றுள்ளனர். தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை செய்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்.பொறுப்பாளர் வருகை
கட்சி ரீதியில் பணிகளை தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக கட்சி வட்டாரங்களில் கூறுகையில், “அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் தினேஷ் குண்டுராவ் புதுவை மாநில பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் முதல் முறையாக 30-ம் தேதி (இன்று) புதுவைக்கு வருகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 1-ம் தேதி புறப்படுகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பற்றி உரையாடுவதே இப்பயண நோக்கம்” என்கின்றனர்.
இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல்களை சந்திக்க கட்சிகள் தயாராக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT