Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்பிரச்சினையில் நல்ல தீர்வு காண வேண்டும். ஒரு வேளை அது நடக்காமல் போனால் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முன்னாள் எம்பியுமான கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:
கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தற்போதைய நிலையில் சட்டத்தில் இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. சட்டத்தில் இடமிருக்கிறதோ இல்லையோ, சமூக நீதிப்படி இது நீதியாகாது.
சட்ட சிக்கலாலோ, வாத பிரதிவாத பிரச்சினைகளாலோ சரியென கருதப்படாத சமுதாய நலன் சம்பந்தமான எந்தப் பிரச்சினையிலும் நாம் தலையிட்டு அதை மாற்றி சரி செய்யலாம். அதற்கான வாய்ப்பும், வழி வகையும் நமது அரசியல் சட்டத்தில் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் மோடி உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.
பிரதமர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒருவேளை அது நடக்காமல் போனால் போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். போராட்ட தேதியை மிக விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT