Regional02
கள்ளக்குறிச்சி எஸ்பி இடமாற்றம் :
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக், சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்பி ரோஹித் நாதன், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜி செல்வக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
