சிவகங்கை அரசு மருத்துவமனையில் -  பல்நோக்கு பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் :

சிவகங்கை அரசு மருத்துவமனையில் - பல்நோக்கு பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் :

Published on

சிவகங்கை அரசு மருத்துவ மனையில் பல்நோக்கு பணி யாளர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டம் நடத்தியதால், நோயாளிகள் அவதி அடைந்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 350-க்கும் மேற்பட்ட பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தனியார் நிறுவனம் மூலம் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணி, காவல் பணி, மருத்துவப் பணியாளர்களுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஊதிய உயர்வு முறையாக வழங்கவில்லை. மேலும் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் முறையாக செலுத்தவில்லை.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் வைத்து உறவினர்களே தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பணியாளர்கள் அனை வரும் பணிக்குச் சென்றனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in