Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

இன்ஸ்பெக்டர் மீதான வழக்கை திசைதிருப்புவதாக பெண் போராட்டம் :

நாகர்கோவில்

களியக்காவிளை அருகே மேக்கோட்டை சேர்ந்த 33 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாய கருக்கலைப்பு செய்ததாக, பளுகல் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருந்த சுந்தரலிங்கம் உட்பட 8 பேர் மீது குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுந்தரலிங்கம் தற்போது, தேனி மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக உள்ளார்.

இவ்வழக்கை மார்த்தாண்டம் மகளிர் போலீஸார் விசாரிக்கின்றனர். `இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என, பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தி வந்தார். நேற்று அந்தப்பெண் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வாயிலில் அமர்ந்து திடீர் பேராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார், அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர், `இவ்வழக்கை போலீஸார் திசைதிருப்பி வருகின்றனர்’ எனவும், `நீதி கிடைக்கும் வரை அங்கிருந்து செல்லப் போவதில்லை’ எனவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை வாகனத்தில் ஏற்றிச்சென்ற போலீஸார், மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, `வழக்கில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்து, அவரை அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x