Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஜனநாயக நாட்டில் தேர்தல்களின் முக்கியத்துவம், 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லா வாக்குப்பதிவு, வாக்காளராக பதிவதன் முக்கியத்துவம், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடந்த இந்தியதேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் இந்த தலைப்புகளின் அடிப்படையில் சுவரொட்டிகள் தயாரித்தல், ஓவியப்போட்டி, முழக்கத்துக்கான வார்த்தைகள் ஏற்படுத்துதல், பாட்டுப் போட்டி குழு நடனம் (2- 3 நிமிட வீடியோ பதிவு) மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
இப்போட்டிகளுக்காக தயாரிக்கப்படும் எந்தவொரு இனத்திலும் அரசியல் சார்போ, பிறரை புண்படுத்தும் வகையிலான வாசகங்களோ இடம்பெறக் கூடாது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், முதல் 15 இடங்களைப் பிடிப்பவர்களின் படைப்புகள் அனைத்தும் தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்படவுள்ளது. எனவே, இப்போட்டிகளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நடத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ளஇயலாத மாணவ, மாணவியர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டபொதுமக்கள் வாக்காளர் பதிவுஅலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தங்களுடைய படைப்புகளை 25.12.2021-க்குள் சமர்ப்பிக்கலாம். அல்லது https://www.elections.tn.gov.in/SVEEP2022/officersLogin என்ற இணையதளத்தில் நேரடியாகவும் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT