Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ரூ.7.35 கோடியில் புதிதாக 9 கால்நடை மருந்தகங்கள் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

நெமிலி அருகே மூதாட்டி ஜெயமணிக்கு செயற்கைக்கால் பொருத்தப்படு வதை நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள் ஆர்.காந்தி, அனிதா ராதா கிருஷ்ணன். அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்.

அரக்கோணம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நடப்பாண்டில் ரூ.7.35 கோடியில் புதிதாக 9 கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மற்றும் வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சிகளில் தலா ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 44 கால்நடை மருந்தகங்களில் 24 மருத்துவர்கள் மட்டும் உள்ளனர். மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் பணியிடங்கள் நிரப்பும்போது ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு துறையின் அமைச்சர் முன் னுரிமை அளிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசும்போது, ‘‘இந்தியாவிலேயே சிறந்த கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த நோய்தடுப்பு மருந்து நிலையத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கி அதற்கான பணிகள் நடைபெறுகிறது. இந் தாண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.7.35 கோடியில் மொத்தம் 9 கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட உள்ளன’’ என்றார்.

பின்னர், நெமிலி வட்டம் மேலபுலம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் நகரில் வசிப்பவர் மூதாட்டி ஜெயமணி. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கால் அகற்றப்பட்ட நிலை யில் தனக்கு உதவ வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்திக்கு செல்போன் வழியாக ஜெயமணி சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தார்.

அதன்படி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், நெமிலி சென்ற அமைச்சர் ஆர்.காந்தி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் சென்று ஜெயமணியை நேரில் சந்தித்து அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை நேற்று வழங்கி அவருக்கு பொருத்தப்பட்டது.

தடுப்பூசியை குறைத்த மத்திய அரசு

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 90 லட்சம் டோஸ் கோமாரி நோய் தடுப்பூசியில் இந்த ஆண்டு 20 லட்சம் டோஸ் மட்டும் அனுப்பியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள எல்லா கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி குறித்த காலத்தில் போட முடியவில்லை. இதன் காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x