Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM

வெண்பட்டுக் கூடு விலை ரூ.700-ஐ கடந்ததுதருமபுரியில் விவசாயிகள் மகிழ்ச்சி :

தருமபுரி: தருமபுரி அரசு வெண்பட்டுக் கூடு அங்காடியில் நேற்று பட்டுக் கூடுகளுக்கான சராசரி விலை ரூ.700-ஐ கடந்தது.

தருமபுரி நகரில் நான்கு ரோடு அருகே இயங்கி வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் நேற்று முன் தினம் வெண் பட்டுக் கூடுகளுக்கு கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.739-ம், சராசரி விலையாக ரூ.697.59-ம் வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய ஏல விற்பனையின்போது சராசரி விலையே ரூ.700-ஐ கடந்துள்ளது. இதனால் பட்டுக்கூடு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றைய ஏல விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9 விவசாயிகள் 346.100 கிலோ (12 லாட்) வெண் பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.751 வழங்கப்பட்டது. அதேபோல, குறைந்தபட்ச விலையாக ரூ.395-ம், சராசரி விலையாக ரூ.703.21-ம் வழங்கப்பட்டது. நேற்றைய ஏல விற்பனை மூலம் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 380-க்கு வர்த்தகம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x