Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் காணொலி வாயிலாக வழங் கினார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 40, 772 உறுப்பினர்கள் அடங்கிய 2, 675 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.127.18 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகன், எம் எல் ஏக்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, விழுப்புரம் லட்சுமணன், மயிலம் சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ், திட்ட அலுவலர் காஞ்சனா, திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர்
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்கி.பாலசுப்ரமணியம், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபாராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு 1,155 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 25 ஊராட்சி அளவிலானகூட்டமைப்பைச் சேர்ந்த16,860 உறுப்பினர்களுக்கு ரூ.95.66 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்டஇயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கஸ்பர் அருள்மரி யராஜா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT