Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM

கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் :

கோவில்பட்டி

கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் ஆரோக்கிய குழு, இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 3-வது கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ந.ரெ.சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தார். இதுவரை தடுப்பூசி போடாத மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. ஏற்பாடுகளை ஆரோக்கியக் குழு ஒருங்கிணைப்பாளர் தி.கோதையம்மாள், உறுப்பினர்கள் அ.முரளிதரன், க.வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x