Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

மதுரை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு, பயணிகள் நலன் சிறப்பாக உள்ளது : தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பாராட்டு

மதுரை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு, ரயில் பயணிகள் நலனுக்கான பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டுள் ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரி வித்தார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் நேற்று மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். மதுரை, சமயநல்லூர், சோழவந்தான் ரயில்நிலையங்களில் ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று பிற்பகல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னலை திறந்து வைத்தார். தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பை பார்வையிட்டு ஊழியர்களிடம் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ரயில்வே மருத்துவமனை, ரயில் ஓட்டுநர் ஓய்வு அறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகை யில்,

மதுரை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு, ரயில் பயணிகள் நலனுக்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில் பயணிகள் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். பயணிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளை ஆராய்ந்து சிறந்தவைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரயில் பயணிகள் சார்பில் திண்டுக்கல் வர்த்தகர்கள், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் அளித்துள்ள மனுவில், திண்டுக்கல் வழியாகச் செல்லும் பாண்டியன், பாலக்காடு, மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

திருச்சி ராக்போர்ட் ரயிலை திண்டுக்கல் வரை நீட்டிப்பு செய்யவேண்டும். மதுரை-செங்கோட்டை ரயிலை திண்டுக்கல் வரை நீட்டிப்பு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x