பாஜக ஆர்ப்பாட்டம் :

பாஜக ஆர்ப்பாட்டம் :

Published on

சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து பதிவிடுபவர்களின் மீது கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படுவதைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பாஜகவினர் நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர்அருண் தலைமை வகித்தார். பாஜக மாவட்டத் தலைவர் கோட்டூர் ராகவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மேலிட பார்வையாளர் பேட்டைசிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, பெரம்பலூர் நான்கு சாலை பகுதியில் பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையிலும், திருச்சி ரங்கம் ராஜகோபுரம் முன்பும் பாஜகவினர் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in