Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM
தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம்,விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார் கோவில் ஆகிய நீதிமன்றங்களில் நடந்தது.
இதில் கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். ஜவஹர் தலைமையில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் உட்பட சுமார் 6,897 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 3,053 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.20,38,06,512 வழங்க உத்தரவிடப்பட்டது.
புதுச்சேரியில்
1,208 வழக்குகளுக்கு தீர்வு
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வு, சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்காலில் 5 அமர்வு, மாஹேவில் 2 அமர்வு, ஏனாமில் 1 அமர்வு என மொத்தம் 18 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், சிவில் வழக்குகள் என நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என மொத்தம் 3,626 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,208 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.3 கோடி 98 லட்சத்து 16 ஆயிரத்து 936-க்கு தீர்வு காணப்பட்டது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT