Published : 12 Dec 2021 03:11 AM
Last Updated : 12 Dec 2021 03:11 AM

எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா :

திருநெல்வேலியில் பாரதி பயின்ற மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்

கோவில்பட்டி/ திருநெல்வேலி/ தென்காசி

பாரதியாரின் 140-வது ஆண்டுபிறந்த தினத்தை முன்னிட்டுஎட்டயபுரத்தில் உள்ள பாரதிபிறந்த இல்லம் மற்றும் நினைவுமணி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு தலைவர் கோ. பெரியண்ணன் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவுக்கு தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் ரா.துரை முருகன் தலைமை வகித்தார்.

திருவையாறு பாரதி இயக்கம்சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. திருவையாறில் பாரதிக்கு நினைவாலயம் அமைக்கும் பொருட்டு காணி நிலம் திட்டம் தொடங்கப்பட்டது. திருவையாறு பாரதி இயக்கச் செயலாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமசுப்பு தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ராமனூத்து அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசி ரியர் மு.க.இப் ராஹிம் பாரதிவேடமணிந்து வந்து பள்ளி மாணவ மாணவிகளுடன் பாரதி சிலைக்கு மாலை அணி வித்தார்.

எட்டயபுரத்தில் உள்ள ரகுநாதன் நூலக வளாகத்தில் பாரதி உருவப்படத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவிக் கப்பட்டது.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பாரதி பயின்ற மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. பள்ளி கல்விச் சங்க செயலாளர் மு.செல்லையா வரவேற்றார். உறுப்பினர்கள் திருமலையப்பன், பி.டி சிதம்பரம், சென்னை மாவட்டபதிவாளர் கண்ணன் முன்னிலைவகித்தனர். திருநெல்வேலி கோட்டாட்சியர் இரா.சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பாகல்லூரி தமிழ்த்துறை தலைவர்ச.மகாதேவன் சிறப்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் சி. உலகநாதன் நன்றி கூறினார்.

பாரதியார் உலக பொதுச் சேவைநிதியத்தின் சார்பில் திருநெல்வேலி சந்திப்பிலுள்ள பாரதியார் சிலைக்குலிட்டில் பிளவர் கல்வி குழும தலைவர் அ. மரியசூசை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருட்தந்தை மை.பா.ஜேசுராஜ் , மன்ற பொதுச்செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன், இரா.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல் காங்கிரஸ் கட்சிசார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்,மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். ஆர்.பி. ஓவியக் கழக மாணவர்கள் பாரதியார் ஓவியங்களைக் கொண்டு ‘100 பாரதி’ என்று வடிவமைத்தனர்.

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் பாரதியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஆசிரியர் செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்று பேசினார். ஆசிரியர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x