Published : 11 Dec 2021 03:11 AM
Last Updated : 11 Dec 2021 03:11 AM

ஏலம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் 166 பவுன் பறிப்பா? : பல்வேறு கோணத்தில் தனிப்படை விசாரணை

மதுரை

விழுப்புரத்தில் வங்கி ஒன்றில் அடகு நகைகளை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை ஆரப் பாளையம் பகுதி நிதி நிறுவனம் சார்பில், அதன் ஊழியர்கள் மைக்கேல்ராஜ், செந்தில் ஆகியோர் கடந்த 9-ம் தேதி நடந்த ஏலத்தில் பங்கேற்றனர்.

இதில் 166 பவுன் நகைகளை ஏலம் எடுத்துக் கொண்டு, காரில் மதுரைக்கு திரும்பியபோது, கொட்டாம்பட்டி அருகே மற்றொரு காரில் வந்த 5 பேர் கும்பல் வழிமறித்து தாக்கி காரை பறித்துக் கொண்டு தப்பியது.

இதற்கிடையில் கொள்ளைக் கும்பல் கடத்திச் சென்ற காரை, சுக்காம்பட்டியில் நிறுத்தி விட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவில் மேலூர் டிஎஸ்பி பிரபாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படையினர் கூறுகையில்,‘‘ மதுரை ஊழியர்கள் விழுப்புரம் ஏலத்தில் பங்கேற்று நகைகளை ஏலம் எடுத்துக் கொண்டு வருவது பற்றி முன்கூட்டியே தெரிந்த நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். ஏலத்தில் பங் கேற்ற மற்றொரு தரப்பினர் நகைகளை ஏலம் எடுக்க முடி யாத ஆத்திரத்தில் மதுரை ஊழியர்களை கண்காணித்து வழிப்பறியை நடத்தி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம்.

தனியார் ஊழியர்கள் மைக்கேல்ராஜ், செந்தில், அவர் களது கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோரது மொபைல்போன் உரையாடல் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்த வழிப் பறிச் சம்பவமே ஒரு நாடகமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x