Published : 11 Dec 2021 03:12 AM
Last Updated : 11 Dec 2021 03:12 AM

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் - கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம் :

திருச்சி

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்வின்ஸ் நிறுவனர் கணேசன் கூறியது:

பண்டிகைகள் நம் வாழ்வை மகிழ்விக்கவே கொண்டாடப்படுகின்றன. அனைத்துப் பண்டிகைகளிலும் இனிப்பு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் உண்டு. அதில் நாம் இப்போது நினைவுகூர்வது கிறிஸ்துமஸ் கேக் குறித்து தான்.

கிறிஸ்துமஸ் கேக் மிகவும் பாரம்பரியமானது. அதை செய்யத் தொடங்குவதே திருவிழாவின் தொடக்கமாகும். செர்ரி, உலர் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரிகாட், டுட்டி ப்ரூட்டி, பேரீட்சை ஆகிய சத்தான பழங்கள், ஜாதிக்காய் பொடி, லவங்கப்பட்டைப் பொடி போன்றவற்றை ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைப்போம். இந்த பழங்கள் நன்கு ஊறிய பின்னர், சுவையான தரமான கிறிஸ்துமஸ் கேக் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவோம்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கேக், புட்டிங், சாக்லெட் ஆகியவற்றை செய்து வருகிறோம். அவற்றில் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குக்கீஸ், சாக்லெட் ஆகியவை நியாயமான விலையில் எங்களது அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கும்.

இந்த கடினமாக காலத்திலும் நமக்கு பண்டிகைகள் தான் ஆறுதல். இந்த விழாக்களை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அனைவருக்கும் அஸ்வின் குழுமத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x