Published : 11 Dec 2021 03:13 AM
Last Updated : 11 Dec 2021 03:13 AM
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் உலர் பூதயாரிப்பு நிறுவனத்தில் சமூக நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்து, பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டார். அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்கள் மற்றும்குழந்தைகளின் பாதுகாப்புக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குழந்தைகளுக்கான கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறக்கூடாது. குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு தெரிந்தநபர்கள் மூலம் தான் பாலியல் தொந்தரவு பெரும்பாலும் வருகிறது. எனவே, பெற்றோர் மிகவும்விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 18 வயது முடிந்த பிறகுதான் பெண்களுக்கு திருமணம் செய்யவேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும்நபர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்டசமூக நல அலுவலர் தனலட்சுமி, தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சுரேஷ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், காவல் ஆய்வாளர் வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT