Published : 09 Dec 2021 03:10 AM
Last Updated : 09 Dec 2021 03:10 AM

40 வியாபாரிகளுக்கு அபராதம் :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசால்தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்ததற்காக கடந்த 4 மாதங்களில் 40 வியாபாரிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் உணவு மாதிரி எடுக்கும் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டால், அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இதனால், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x