Published : 09 Dec 2021 03:11 AM
Last Updated : 09 Dec 2021 03:11 AM
வேலூர் கஸ்பா தர்மகர்த்தா பரமசிவன் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அன்சர், இவரது மனைவி சுரேயா. இவர்களது மகள் அப்ரீன் (4), மகன் அசேன் (3). இந் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்சர் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத் துச்செல்லாத ஆட்டோ ஓட்டுநர் அன்சர் வீட்டின் அருகில் உள்ள மருந்துக் கடையில் குழந்தை களுக்கு மருந்து வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மருந்துகளை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் நிற்காமல் நேற்று முன்தினம் இரவு 2 குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு கஸ்பா பகுதியில் உள்ள தர்ஹாவுக்கு குழந்தைகளை அழைத்துச்சென்ற அன்சர் அங்கு 2 குழந்தைகளுக்கும் மந்திரித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, 2 குழந்தை களின் உடல் நிலை மேலும் மோச மடைந்ததால் கஸ்பா பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் மீண்டும் மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். மருந்துகளை சாப்பிட்டதும் குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். உடனே, வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்தபோது, வரும் வழியி லேயே 2 குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இத குறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸார் மருத்துவமனைக்கு சென்று குழந் தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘உயிரிழந்த 2 குழந்தைகளுக்கும் கடந்த 4 நாட்களாக வாந்தி யும், வயிற்றுப்போக்கும் இருந்துள் ளது. அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க பெற்றோர்அக்கறை காட்டாமல் கவனக் குறைவுடன் இருந்துள்ளனர்.
மேலும், வாந்தி, மருத்துவர் களின் ஆலோசனை பெறாமல் பொதுமக்கள் சிலர் தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதனால், விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொது மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவரின் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
கஸ்பா பகுதியில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT