Published : 08 Dec 2021 04:11 AM
Last Updated : 08 Dec 2021 04:11 AM
திருவண்ணாமலையில் வரும் 11-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தி.மலை அருணை பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள், செவிலியர் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
இதில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.privatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட படித்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று 15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. முகாமுக்கு வருவதற்கு வசதியாக ஈசான்ய லிங்கம் அருகில், வேலூர் சாலை (தீபம் நகர்) அருகில் என இரண்டு இடங்களில் இருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT