உதகை அருகே இளைஞர் கொலை :

உதகை அருகே இளைஞர் கொலை :

Published on

நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் அருகே தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவா (28) என்பவரை நேற்று மாலை பரத் (26) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலமாக சிவாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், டிஎஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, பரத் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த சிவா மற்றும் பரத் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், பரத்தின் தாய் குறித்து சிவா தவறாக பேசியதால், ஆத்திரத்தில் பரத் கத்தியால் குத்தியதில் சிவா உயிரிழந்துள்ளார் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in