Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM
ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கிய இடத்தை மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் அடுத்த ஆரியங்காட்டு ரயில்வே நுழைவு பாலத்தில், நேற்று முன்தினம் மழைநீர் தேங்கியதால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி, ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரயில்வே நுழைவு பாலத்தில் இருபுறமும் இருந்து வரக்கூடிய மழைநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இங்கு புதிய குழாய்கள் அமைத்து மழைநீர் தேங்காதவாறு வெளியேற்றப்படும், என்றார்.
தொடர்ந்து சாவடிப்பாளையம், காளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT