வேலூர்  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேலூர்  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

 வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் - வேலை வாய்ப்பு முகாம் :

Published on

 வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 65 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வேலூர்  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சியட்’ நிறுவனத்தின் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரியின் துணைத் தலைவர் ஜனார்தனன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் ரமேஷ் முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஞானசேகரன் வரவேற்றார். முகாமில்  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 90 மாணவர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் 65 பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளத்துடன் கூடிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

முகாமில் சியட் நிறுவன மேலாளர்கள் நிரஞ்சனா, கவுதம், ஆகாஷ், ஜார்ஜ், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in