Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

கிருஷ்ணகிரியில் நேற்று ஒரே நாளில் - 62 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தினர் :

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 13-வது கரோனா தடுப்பூசி முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்து கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மக்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்களில் 4.20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட 722 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒமைக்ரான் தொற்று அச்சம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரத்தடை உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்தை விட நேற்று நடந்த முகாமில் பலர் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சூளகிரி பகுதியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.காவேரிப்பட்டணம் ஒன்றியத் தில் பெண்ணேஸ் வரமடம் ஊராட்சி சவுளூர் கிராமத்தில் நடந்த முகாமினை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

நேற்று மாலை 6 மணி வரை 61,524 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடந்த வாரம் நடந்த முகாமில் 20,935 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x