Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM
விழுப்புரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.17.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 30.11.2021 வரை பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் 91,162 நபர்களில் முதற்கட்டமாக 318 தொழிலாளர்களுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டிலான மாதாந்திர ஓய்வூ தியம் வழங்கப்பட்டது. இதே போல் 233 தொழிலாளர்களுக்கு ரூ. 4,51,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 39 தொழிலாளர்களுக்கு ரூ.9,75,000மதிப்பீட்டில் இயற்கை மரணஉதவித்தொகையும், 3 தொழிலாளர் களுக்கு ரூ.11,000 மதிப்பீட்டில் திருமண உதவித் தொகை என மொத்தம் 593 தொழிலாளர்களுக்கு ரூ.17,55,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள் க.பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர், "அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு எப்போ தும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் எம்பி து.ரவிக்குமார் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.நாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், தொழிலாளர் உதவி ஆணையர் ம.ஞானப் பிரகாசம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT