Published : 03 Dec 2021 03:09 AM
Last Updated : 03 Dec 2021 03:09 AM
வேலூர் சிஎம்சி மருத்துவமனை யின் தர மேலாளர் லல்லு ஜோசப் புக்கு சர்வதேச அளவிலான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை யின் தர மேலாளர் மற்றும் இணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் லல்லு ஜோசப். இவர், ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் 2021-ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய கவுன்சில் ஆன் ஹெல்த்கேர் ஸ்டாண்டர்ட்ஸ் (ஏ.சி.எச்.எஸ்) என்ற தர மேம்பாட்டுக்கான சர்வதேச பதக்கத்தை வென்றுள்ளார். இந்த ஏ.சி.எச்.எஸ் என்ற அமைப்பு தரமேம்பாட்டு சாதனைகள் மற்றும் தனித்துவ கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து வரு கின்றனர். மருத்துவர் அல்லாத ஒருவராக லல்லு ஜோசப்புக்கு சர்வதேச அளவிலான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
மெக்கானிக்கல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள லல்லு ஜோசப், கடந்த 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப்மேனேஜ்மென்ட்டில் (ஐ.ஐ.எம்) கல்வி நிறுவனத் தில் ‘வணிக நிர்வாகத்தில்' முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர்,கிரீன் பெல்ட் மற்றும் ஹெல்த்கேர் பிரிவு தரத்துக்கான சர்வதேச சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். மேலும்,கனேடியன் ஹெல்த்கேர் அசோசியேஷன் மூலம் தர மேம்பாட்டில் பயிற்சியும் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT