Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

திருப்பூரில் நர்சிங் மாணவி உட்பட 9 பேருக்கு டெங்கு :

திருப்பூர்

திருப்பூர் திருமுருகன்பூண்டியை 22 வயது ஆண், எஸ்.எஸ். நகர் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த 24 வயது ஆண், அதே பகுதி 24 வயது பெண், திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 19 வயது நர்சிங் கல்லூரி மாணவி, நல்லகவுண்டன்நல்லூரை சேர்ந்த 28 வயது ஆண், அவிநாசி முதலிபாளையம் 17 வயது ஆண், முதலிபாளையம் பொன்னாபுரத்தை சேர்ந்த 26 வயது பெண், கணக்கம்பாளையம் அம்பாள் நகரை சேர்ந்த 18 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 18 வயது ஆண் என 9 பேர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x