Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

உதகையில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு :

உதகை

உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், உலக எய்ட்ஸ் தின விழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். பின்னர் ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஆட்சியர் பேசும்போது, "எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் தனிமைப்படுத்தாமல், அன்புடன் அரவணைப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டோம்" என்றார்.

இதை்தொடர்ந்து, 17 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை தொகை மாதந்தோறும் தலா ரூ.1,000 பெறுவதற்கான உத்தரவுகளையும், தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 19 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், திருமணம் மற்றும் இயற்கை மரணம் என ரூ.1,31,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான உத்தரவுகளையும் ஆட்சியர் வழங்கினார்.

உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லெனின், மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ்) அறிவழகன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பட விளக்கம்

உதகையில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித்.

படம்:ஆர்.டி.சிவசங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x