Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM
கமுதி அருகே தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால் 5 கிராம மக்கள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஆற்றை கடக்கின்றனர்.
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு பரளை ஆற்றின் மூலம் 500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமுதி வட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலம் அருகே பரளை யாற்றில் தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் ஆகிய 5 கிராம மக்கள் தரைப்பாலத்தில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று வருகின்றனர்.
இதற்காக தரைப்பாலம் அமைந்த பகுதியில் கயிறு கட்டியுள்ளனர். வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளிக் குழந்தைகளை பெற்றோர்கள் தோளில் தூக்கிக் கொண்டு ஆபத்தான முறையில் தரைப்பாலத்தைக் கடக்கின்றனர். இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே சொக்க நாதன்புத்தூர் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக பெய்தமழையால் பெரியகுளம் கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதனால் சொக்கநாதன்புத்தூரி லிருந்து மாங்குடி, மீனாட்சிபுரம், சங்கரன்கோவில் வரை செல்லக் கூடிய சாலையில் தரைப் பாலம் சேதமடைந்துள்ளது. தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் இப்பகு திக்குச் செல்லக் கூடிய பொது மக்களும், விவசாயிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் தடைபட் டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT