Published : 30 Nov 2021 03:10 AM
Last Updated : 30 Nov 2021 03:10 AM
தி.மலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில் மற்றும் சின்னக்கடை வீதியில் உள்ள துர்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு காணிக்கை பெறப்படுகிறது. அக்காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்பட்டு, கோயில் பெயரில் உள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதன்படி, கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றதும், உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.
கோயிலில் உள்ள திருக் கல்யாண மண்டபத்தில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக எண்ணும் பணி நடைபெற்றது. அதில் காணிக்கையாக ரூ.1,21,46,133, 243 கிராம் தங்கம் மற்றும் 979 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT